இஸ்லாம் ஓர் உலகளாவ- ய மார்க்கம்

இஸ்லாம் ஓர் உலகளாவ- ய மார்க்கம்


இஸ்லாமிய மார்க்கமானது மக்கள் மத்தியில் காணப்படும் இன, கலாசார, வழக்காறு, வாழ்விடம் போன்ற வேறுபாடுகளை நோக்காது அவர்கள் அனைவருக்கும் அருளாகவும்  வழிகாட்டியாகவும் வந்துள்ளது.

இதனையே அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்:

உங்களை உலக மக்களுக்கு அருளாகவே நாம் அனுப்பினோம். (அல் அன்பியாஃ : 107)

இதன் காரணமாகவே, இஸ்லாம் மனித சமூகத்தின் அனைத்து விதமான வழக்காறுகளையும், சம்பிரதாயங்களையும் மதிக்கின்றது.

புதியதொரு முஸ்லிமை அவனது சம்பிரதாயங்கள் இஸ்லாத்தின் போதனைகளுக்கு முரண்படாத போது அவைகளை மாற்றிக்கொள்ளுமாறு இஸ்லாம் அவனைக் கேட்டுக்கொள்ளவில்லை.

அவ்வாறு அவைகள் இஸ்லாத்தின் போதனைகளுடன் முரண்படுகின்ற போது அவைகளை மாற்றிக்கொண்டு இஸ்லாத்திற்குப் பொருத்தமானவைகளால் அவற்றை நிரப்ப வேண்டும்.

ஏனெனில், மிகவும் அறிந்தவனும் அதிக அனுபவம் பெற்றவனுமான அல்லாஹ்வே சில விடயங்களை ஏவியும் மற்றும் சில விடயங்களை தடுத்தும் உள்ளான்.

நாம் அவனை நம்பி இருப்பது அவனுடைய சட்டங்களுக்கு இசைவாக நடக்க வேண்டுமென்பதனையே சுட்டிக்காட்டி நிற்கின்றது.

இஸ்லாத்துடனோ, அதன்  சட்டவரையறைகளுடனோ எவ்விதத்  தொடர்புமற்ற முஸ்லிம்களுடைய சில சம்பிரதாயங்களை புதியதொரு முஸ்லிம் பின்பற்றவோ, கடைப்பிடிக்குமாறோ அவனைப் பணிக்கவில்லை என்பதை இஸ்லாம் போதிக்கின்றது.

உண்மையாகவே அவைகள், சில  மனிதர்களால் பின்பற்றப்படுகின்ற அனுமதிக்கப்பட்ட ஒரு வகைச் சம்பிரதாய அம்சங்களே ஆகும்.

பூமி முழுவதும் அல்லாஹ்வை வணங்கும் தளமாகும் மனிதன் வாழ்வதற்கும், அல்லாஹ்வை பொருத்தமான இடமாக முழுப் பூமியையும் இஸ்லாம் வணங்குவதற்கும் கருதுகின்றது.

முஸ்லிம்கள் கட்டாயம் ஹிஜ்ரத்(புலம் பெயருதல்) செய்து, இங்கு தான் வாழ வேண்டுமென்ற குறிப்பான ஓர் இடமோ அல்லது ஒரு நாடோ உலகில் கிடையாது.

இங்கு, கருத்திற்கொள்ள வேண்டிய அம்சம் யாதெனில், நாம் வாழுமிடத்தில் அல்லாஹ்வை வணங்குவதற்குரிய சுதந்திரம் உள்ளதா? என்பதே ஆகும்.

ஒரு முஸ்லிம் பிற இடமொன்றிற்கு ஹிஜ்ரத் செய்து வாழ வேண்டுமென்ற அவசியமில்லை. அல்லாஹ்வை வணங்குவதிலிருந்து ஒருவர் தடுக்கப்படும்   போது மாத்திரமே அவனை வணங்குவதற்கு முடியுமான ஓர் இடத்தை நோக்கி அவர் செல்ல வேண்டும்.

இதனை அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான் :

ஈமான் கொண்ட எனது அடியார்களே! நிச்சயமாக எனது பூமி விசாலமானது. எனவே, நீங்கள் என்னையே வணங்குங்கள் (அல் அன்கபூத் : 56)