
இஸ்லாத்தின் சட்டங்களைக் கற்றுக்கொள்ளல்
ஒரு முஸ்லிம் தனது கடமைகளை மிகச் சரியாகவும் பரந்த விளக்கத்தோடும் நிறைவேற்றுவதற்கு வணக்க வழிபாடுகள், சமூக உறவுகள் மற்றும் ஏனைய தொடர்புகள் போன்ற அவனது வாழ்வின் சகல துறை அம்சங்களோடும் தொடர்பான இஸ்லாமிய சட்டங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் கொண்டிருத்தல் வேண்டும்.
இதனையே நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள்:
யாருக்கு அல்லாஹ் நலனை நாடுகின்றானோ, அவருக்கு அவன் மார்க்கத்தில் விளக்கத்தைக் கொடுக்கின்றான் (அல் புகாரி :71, முஸ்லிம் : 1037)
தொழும் முறை, சுத்தம் செய்தல், உணவு மற்றும் குடிபான வகைகளுள் அனுமதிக்கப்பட் டவைகள்,அனுமதிக்கப்படாதவைகள் போன்ற வாஜிபான சட்டங்களை (கட்டாயம் படிக்க வேண்டும் என்ற நிலையிலுள்ள சட்டங்கள்) ஒரு முஸ்லிம் கற்றுக்கொள்வது கட்டாயக் கடமையாகும்.
படிக்குமாறு ஊக்கப்படுத்தப்பட்ட இஸ்லாத்தின் வேறு சில சட்டங்களை அவர் கற்றுக்கொள்வது விரும்பத்தக்கதாகும். ஆனால் அது கட்டாயமானது அல்ல.
