இஸ்லாத்தின் ஐந்து தூன்கள்

இஸ்லாத்தின் ஐந்து தூன்கள்


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இஸ்லாம் ஐந்து (தூண்கள்) மீது நிறுவப்பட்டுள்ளது :-

அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லையென்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது தூதரென்றும் சாட்சி கூறுதல், தொழுகையை நிலை நாட்டுதல், ஸகாத் கொடுத்தல், ஹஜ் கடமையை நிறைவேற்றுதல், றமழான் மாதம் நோன்பு நோற்றல். (அல் புகாரி : 8, முஸ்லிம் : 16).

இந்த ஐந்து அம்சங்களும் இஸ்லாத்தின் அடிப்படையான பிரதான தூண்களாகும். அடுத்து இடம் பெறும் பாடங்களில் இவைகளையும் இவைகளுக்கான சட்டங்களையும் விரிவாக விளக்குவோம்.

இவற்றுள் முதலாவது நம்பிக்கையும் ஏகத்துவமுமாகும். இது (எமது நம்பிக்கை) எனும் தலைப்பில் அடுத்து இடம்பெறும்.

அடுத்து, வணக்கங்களுள் மிகவும் மகத்தானதும் சிறந்ததுமான தொழுகையைப் பற்றிய பாடம் இடம்பெறும்.

இஸ்லாத்தின் தூண் தொழுகை என்று நபியவர்கள் கூறினார்கள். (அத் திர்மிதி 2749) அதாவது இஸ்லாம் இதன் மீதே நிறுவப்பட்டுள்ளது. இந்தத் தொழுகை இல்லையேல் இஸ்லாமே இல்லை.

எவ்வாறாயினும், தொழுகை நிறைவேறுவதற்கு ஒரு முஸ்லிம் தன்னை தூய்மைப்படுத்திக் கொள்வது அவசியமாகும்.

இதனால், (எமது நம்பிக்கை) எனும் தலைப்பானது (எமது சுத்தம்) பின்னர் (எமது தொழுகை) எனும் தலைப்புக்களுக்கு முன்னரே இடம்பெற்றுள்ளது.

இஸ்லாத்தின் தூண்கள் :


இஸ்லாத்தின் ஐந்து தூன்கள்


1- அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அவன் தூ தர் என்றும் சாட்சி கூறுதல்.
2- தொழுகையை நிலை நாட்டுதல்.
3- ஸகாத் கொடுத்தல்.
4- றமழான் மாதம் நோன்பு நோற்றல்.
5- ஹஜ்ஜை நிறைவேற்றுதல்.