
இஸ்லாமியச் சட்டங்களை அறிந்துகொள்வது எவ்வாறு ?
ஒரு மனிதன் நோய்வாய்ப்பட்டு, சிகிச்சை பெற விரும்பினால், பயன் நிறைந்த சிகிச்சையைப் பெறும் நோக்கில் அவன் நன்கு கைதேர்ந்த திறமைமிகு வைத்தியரொருவரை தேடுவான்.
அவனுக்கு அவனது உயிர் மிகப்பெறுமதி வாய்ந்த ஒன்றாக இருப்பதனால், எந்த மருத்துவரிடமிருந்து எவ்வகையிலான மருந்துச் சீட்டைப் பெற்றாகிலும் நோயை குணப்படுத்துவதில் அவன் அசிரத்தையாக இருக்கப்போவதில்லை.
மனிதனின் மார்க்கம் அவனது வாழ்வில் மிகப் பெறுமதியானது.

புதியதொரு முஸ்லிம், தனக்கு அருகிலுள்ள இஸ்லாமிய நிலையங்களோடு தொடர்பினைக் கொண்டிருப்பதோடு, நம்பகமான புத்தகங்கள் மற்றும் இணையத்தளங்களை பார்வையிட வேண்டும்.
எனவே, அவன் தனது மார்க்கத்தைப் பற்றி கற்றுக்கொள்வதிலும் அதிலே தெரியாத விடயங்களை கற்றறிந்த நம்பிக்கையான அறிஞர்களை அணுகி க்கேட்டுப் படித்துக் கொள்வதிலும் தன்னால் முடிந்த முயற்சியை மேற்கொள்வது அவனின் பொறுப்பாகும்.
இந்த புத்தகத்தை நீங்கள் வாசிப்பது இஸ்லாத்தின் போதனைகளைத் தெரிந்து கொள்வதற்கான ஒரு வழியாகும்.
ஏனெனில், இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துக்களையும் உங்களது சந்தேகங்களுக்கான அவர்களின் பதில்களையும் இது கொண்டுள்ளது.
அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்:
ஆகவே, நீங்கள் (அதனைப் பற்றி) அறியாதவர்களாக இருந்தால் அறிந்தவர்களிடம் கேட்டு (த்தெரிந்து) க்கொள்ளுங்கள். (அந் நஹ்ல் : 43) மார்க்க விடயங்களுள் சந்தேகங்கள் ஏதும் ஏற்பட்டால் வேறு சில வழிமுறைகளையும் நீங்கள் கைக்கொள்ளல் வேண்டும்.
அதாவது, உங்களுக்கு அருகிலுள்ள இஸ்லாமிய நிலையங்கள், பள்ளிவாயில்களோடு தொடர்புகொண்டு மேற்படி உங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
இவ்வாறான இடங்கள் மற்றும் அதன் தொடர்பிலக்கங்கள் என்பனவற்றை பின்வரும் இணையத்தளங்களைப் பார்வையிடுவதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.