இஸ்லாம் ஒரு நடுநிலை மார்க்கம்

இஸ்லாம் ஒரு நடுநிலை மார்க்கம்


இஸ்லாம், மார்க்க விடயங்களை செயற்படுத்தும் போது தீவிரப் போக்கையோ அல்லது கவனயீனப்போக்கையோ கைக்கொள்ளாது நடுநிலைக் கொள்கையை கடைபிடிக்கின்ற மிதமான மார்க்கமாகும்.

இந்த நடுநிலைப் போக்கானது இஸ்லாத்தின் வணக்க வழிபாடுகள் மற்றும் சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்திலும் வியாபித்துக் காணப்படுகின்றது.

இதன் காரணமாகவே, இறைத்தூதர், அவர்களின் தோழர்கள் மற்றும் முஃமின்கள் அனைவரும் நடுநிலையை கடைபிடிக்க வேண்டுமென அல்லாஹ் தனது பலமான கட்டளையைப் பிறப்பித்துள்ளான்.

இது, பின்வரும் இரண்டு விடயங்களைச் செய்வதன் மூலம் இடம்பெறும்.


    • 1

      மார்க்கத்தில் மிதமிஞ்சிய போக்கினைக் கைக்கொள்வதைத் தவிர்த்தல்.

    • 2

      மார்க்கத்தை நிலையாக பின்பற்றலும் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களை மதித்தலும்.

இதனை அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்: (நபியே!) உமக்கேவப்பட்ட பிரகாரம் நீரும், உம்முடன் பச்சாதாபப் பட்டோரும், (நேரான வழியில்) உறுதியாக இருங்கள்; (இதில்) நீங்கள் வரம்பு மீறியும் விடாதீர்கள்; நிச்சயமாக, அவன் நீங்கள் செய்பவற்றைப் பார்க்கிறவன். (ஹூத் : 112)

சத்தியத்தைப் பின்பற்றுவதில் தீவிரப் போக்கை கைக்கொள்ளாது மார்க்கத்தில் நிலைத்திருப்பதோடு அதிலே கூடிய முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்தையே இந்த வசனம் உணர்த்துகின்றது.

நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்கு ஹஜ்ஜுக் கிரியைகளைப் போதித்துக்கொண்டிக்கும் போது மார்க்கத்தில் மிதமிஞ்சியப் போக்கை கடைபிடிப்பது பற்றி அவர்களுக்கு பின்வருமாறு எச்சரித்ததோடு முன்னைய சமூகங்கள் அழிக்கப்பட்டமைக்கு இதுவும் ஒரு காரணமாக இருந்தது என்றும் விளக்கினார்கள். மார்க்கத்தில் மிதமிஞ்சி நடப்பதை உங்களுக்கு நான் எச்சரிக்கின்றேன்.

இவ்வாறு நடந்துகொண்டமையினால் உங்களுக்கு முன்னர் வாழ்ந்த சமூகங்கள் அழிந்து போயினர். (இப்னு மாஜாஹ் 3029)

இதன் காரணமாகவே, நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள்: வணக்க வழிபாடுகளுள் உங்களுக்கு முடியுமானதைச் செய்யுங்கள்.  (புகாரி 1100)

நபி (ஸல்) அவர்கள் தனக்கு வழங்கப்பட்ட இறைத் தூதின் யதார்த்த நிலை பற்றித் தெளிவுபடுத்தும் போது, இது மக்களின் இயலுமைக்கு மேலாக அவர்களுக்கு சுமைகளை ஏற்படுத்தாது மார்க்கத்தை அறிவுபூர்வமாகவும் இலகுவாகவும் கற்றுக்கொடுக்கவே வந்துள்ளது என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் என்னை குரூரமானவனாகவோ அல்லது கடின விடயங்களைப் போதிப்பவனாகவோ அல்லாமல் இலகு அம்சங்களைப் போதிக்கும் ஓர் ஆசிரியனாகவே அனுப்பியுள்ளான். (முஸ்லிம்: 1478)