
இஸ்லாம் அளவிடப்பட வேண்டியது அதன் கொள்கைகளை வைத்தே அன்றி சில முஸ்லிம்களின் பிழையான நடத்தைகளைக் கொண்டல்ல.
உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மருத்துவ சிகிச்சையை மேற்கொள்கின்ற ஒரு மருத்துவரையோ அல்லது மோசமான பண்பியல்புகளோடு மக்களுடன் பழகுகின்ற ஒரு ஆசிரியரையோ நீங்கள் பார்த்தால், (உண்மையில், இவர்கள் பெற்றிருக்கும் அறிவிற்கும் சமூக அந்தஸ்த்திற்கும் இச்செயற்பாடுகள் முரணானது என்பதை மிகத்தெளிவாகப் புரிந்து கொள்வதோடு வியந்துபோய் எதிர்க்கவும் செய்வீர்கள்.)
ஆனால், இது மனித இனத்திற்கு மருத்துவக் கலை எவ்வளவு தூரம் முக்கியமானது என்ற உங்கள் மனதில் இருக்கின்ற சிந்தனையையோ அல்லது சமூகத்திலும் மனித நாகரீகத்திலும் அறிவு எனும் அம்சம் பெற்றிருக்கும் உயர் அந்தஸ்த்து பற்றியதான எண்ணக்கருவையோ எந்த வகையிலும் மாற்றிவிடுவதில்லை. குறித்த அந்த மருத்துவர் அல்லது ஆசிரியர் அவர் பெற்றிருக்கும் தொழில் அல்லது தகைமை என்பவற்றை பிழையாகப் பிரதிநிதிப்படுத்துகின்றார் என்ற முடிவுக்குத் தான் இறுதியில் வருவீர்கள்.
இவ்வாறே, மோசமாக நடந்துகொள்கின்ற சில முஸ்லிம்களைப் நாம் பார்க்கின்றோம். இவர்களின் இந்நடத்தைகள் இஸ்லாத்தின் உண்மையான தூய கொள்கைகளைப் பிரதிபலிப்பவைகள் அல்ல. இவைகள் இஸ்லாத்தோடு எவ்வகையிலும் தொடர்பில்லாத பிழையான வழக்காறுகள், பண்பாடுகள், மனிதப் பலவீனங்கள் என்பவற்றின் வெளிப்பாடுகளாகும். எப்படி அந்த மருத்துவர் அல்லது ஆசிரியரின் மோசமான நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு மருத்துவத்தை அல்லது கல்வித்துறையை பிழையாகக் கருதவில்லையோ அவ்வாறே முஸ்லிம்களின் சில மோசமான செயற்பாடுகளை வைத்துக் கொண்டு இஸ்லாத்தையும் குறைத்து மதிப்பிடக் கூடாது.
